சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு வலைவீச்சு

தேவதானப்பட்டி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-05-17 17:27 GMT
தேனி: 

தேவதானப்பட்டி அருகே உள்ள காமக்காபட்டியை சேர்ந்தவர் காசிமாயன் (வயது 24). கூலித்தொழிலாளி. இவர், 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி காதலித்துள்ளார். அந்த சிறுமியை கடந்த ஆண்டு திருமணம் செய்து தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். 

இந்நிலையில் அந்த சிறுமி 8 மாத கர்ப்பிணி ஆனார். இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு புகார் சென்றது. குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். விசாரணையை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் காசிமாயன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்