குதம்பை சித்தருக்கு சிறப்பு வழிபாடு

குதம்பை சித்தருக்கு வைகாசி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது

Update: 2022-05-17 17:13 GMT
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயூரநாதர் கோவிலில் ஜீவசமாதி அடைந்து அருளும் குதம்பை சித்தருக்கு ஆன்மீக பேரவை சார்பில் வைகாசி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக குதம்பை சித்தருக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. விழாவில் கோவில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவை நிறுவனர் வக்கீல் ராம.சேயோன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்