மொரப்பூர் அருகே கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல்

மொரப்பூர் அருகே கணவன்-மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-05-17 17:06 GMT
மொரப்பூர்:
மொரப்பூர் அருகே உள்ள சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்  சென்னகேசவன் (வயது 47). இவருடைய நிலத்தில் வாழை மரங்கள் உள்ளன. இந்த வாழை மரத்தின் ஓரத்தில் காய்ந்துபோன பருத்தி செடி குச்சிகளை போட்டு சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (40) என்பவர் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதை தட்டி கேட்ட சென்னகேசவன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை சக்திவேல் தகாத வார்த்தையால் திட்டியும், கல்லால் தாக்கியும்  கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் மொரப்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்