தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண் கைது

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டார்.;

Update:2022-05-17 22:36 IST
தர்மபுரி:
பென்னாகரம் தாலுகா மடம் பகுதியை சேர்ந்தவர் வினிதா (வயது 25). இவர் நேற்று முன்தினம் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தனது உடலில் மண்எண்ெணய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினார்கள். அப்போது தான் வாங்கிய நிலத்தை சிலர் வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததாகவும், அந்த நிலத்தை மீட்டுத்தரக் கோரி அவர் தீக்குளிக்க முயன்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் நாராயணசாமி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வினிதாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்