பல்கி பெருகும் நிதி மோசடி நிறுவனங்கள்
பல்கி பெருகும் நிதி மோசடி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெமிலி
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில், ஷேர் மார்க்கெட் மூலம் அதிக வட்டி தருவதாக கூறி இங்கொன்றும் அங்கொன்றுமாக செயல்பட்டு வந்த நிதி நிறுவனங்கள் தற்போது புற்றீசல் போல் சந்து பொந்துகளில் எல்லாம் முளைத்து பொதுமக்களிடம் ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் நிதி திரட்டி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தனியார் நிறுவனம் பலகோடி ரூபாய் திரட்டியது. இதுகுறித்து விசாரணை நடந்துவரும் நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அலுவலர்களும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.