மாணவர் விடுதி காவலர் திடீர் சாவு

கலவை ஆண்கள் பள்ளி மாணவர் விடுதி காவலர் திடீரென இறந்தார்.

Update: 2022-05-17 16:37 GMT
வாலாஜா

வாலாஜாபேட்டை மணிராம் பகுதியை சேர்ந்தவர் அருள்மொழி (வயது 55). இவர் கலவை ஆண்கள் பள்ளி மாணவர் விடுதியில் இரவு காவலராக பணிசெய்து வந்தார். கடந்த 10-ந் தேதி இரவு பணியில் இருந்தபோது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. 

உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து வாலாஜா போலிசார் வழக்குப்பதிவு செய்து பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்