ரேஷன் கடைகளில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு

ஆலங்குளத்தில் ரேஷன் கடைகளில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.;

Update: 2022-05-17 15:40 GMT
ஆலங்குளம்:

ஆலங்குளத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார். ஆலங்குளம் முருகன் கோவில் அருகில் உள்ள ரேஷன் கடையில் ஆய்வு செய்தபோது, அங்கு தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்பட்டதை அறிந்த அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி தரமான உணவுப்பொருட்கள் வழங்க உத்தரவிட்டார்.

அப்போது, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பாண்டியராஜன், மாவட்ட பொறுப்பாளர்கள் ராதா, கணபதி, சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

மேலும் செய்திகள்