மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

சுரண்டை அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.;

Update: 2022-05-17 14:59 GMT
சுரண்டை:

சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை சார்பில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி 2 நாட்கள் நடந்தது. கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஏ.பீர்க்கான் தலைமை தாங்கினார். வணிகவியல் துறை பேராசிரியர்கள் சித்திரை கனி, ஜெனித் லெனிதா, அரிகரசுதன், இளங்கோவன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக சுரண்டை நகராட்சி தலைவர் எஸ்.பி.வள்ளிமுருகன் கலந்துகொண்டு, விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 

நாகர்கோவில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் நாராயணன், இளம் தொழில் முனைவோர் தனசேகர், சுரண்டை வியாபாரிகள் சங்க நிர்வாகி ராஜகுமார் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வியாபார அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளுக்கு சிறந்த தொழில் மேலாண்மை, தொழில் வளர்ச்சி திட்டம், தொழில் மேலாண்மை, வினாடி- வினா, கோலப்போட்டி, விளம்பர மேலாண்மை ஆகிய போட்டிகள் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வணிகவியல் துறை மாணவ-மாணவிகள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்