தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி நேற்று மீண்டும் தொடங்கியது.

Update: 2022-05-17 13:48 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
அனல் மின்நிலையம்
தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் உள்ளன. இந்த மின்உற்பத்தி எந்திரங்கள் சமீபத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது நிறுத்தி வைக்கப்பட்டன. அதனை தொடர்ந்து மின்தேவைக்கு ஏற்ப எந்திரங்கள் நிறுத்தி இயக்கப்பட்டன. அதன்படி பகல் நேரங்களில் ஒரு எந்திரம் மட்டும் இயக்கப்பட்டன. மாலையில் படிப்படியாக எந்திரங்கள் இயங்கத் தொடங்கும். இரவில் 4 அல்லது 5 மின்உற்பத்தி எந்திரங்களும் இயக்கப்பட்டு முழுவீச்சில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
மீண்டும் உற்பத்தி
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி, சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்உற்பத்தி அதிகரித்ததால் தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் உள்ள 5 மின்உற்பத்தி எந்திரங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் மின்உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டது.
தற்போது மின்சார தேவை அதிகரித்து உள்ளது. இதனால் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் நேற்று காலை முதல் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. இதற்காக படிப்படியாக மின்உற்பத்தி எந்திரங்கள் இயக்கப்பட்டன. நேற்று மாலை 5 மணி அளவில் அனல்மின்நிலையத்தில் உள்ள 2-வது மின் உற்பத்தி எந்திரத்தை தவிர மற்ற 4 மின்உற்பத்தி எந்திரங்களிலும் மின்சார உற்பத்தி நடந்தது. 6 மணி அளவில் சுமார் 720 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்