வரதராஜ பெருமாள் வீதி உலா
காஞ்சீபுரத்தில் வரதராஜ பெருமாள் வீதி உலா நடைபெற்றது.
காஞ்சீபுரம்,
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் உலக பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4-ம் நாள் காலை உற்சவமான சேஷ வாகனத்தையொட்டி வரதராஜ பெருமாளுக்கு வண்ண மலர் மாலைகள் சூட்டி சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி பாதம் தாங்கிகள் தூக்கிவர காஞ்சீபுரம் நகரின் ராஜ வீதிகளில் வலம் வந்தார்.
வழி நெடுகிலும் வீதிகளில் பெரும் திரளான பக்தர்கள் கூடி நின்று சேஷ வாகனத்தில் வலம் வந்த வரதராஜ பெருமாளை தரிசனம் செய்து வணங்கி சென்றனர்.