இரு தரப்பினர் மோதலில் பெண் காயம்

இரு தரப்பினர் மோதலில் பெண் காயம்அடைந்தார்

Update: 2022-05-16 23:15 GMT
நெல்லை:
நெல்லை அருகே அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் ஒரு இடம் சம்பந்தமாக இரு தரப்பினர் இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கல்வீசி தாக்கியதில் புஷ்பம் என்ற பெண் காயம் அடைந்தார்.
உடனே அவரை பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரை இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மேலும் செய்திகள்