கல்குவாரி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி

கல்குவாரி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும், என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்

Update: 2022-05-16 22:59 GMT
நெல்லை:
கல்குவாரி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும், என்று மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
கல்குவாரி விபத்து
நெல்லை மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில்  கல்குவாரி விபத்தில் சிக்கி காயமடைந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜய், முருகன் ஆகியோரை காங்கிரஸ் கட்சி மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை அருகே கல்குவாரியில் ஏற்பட்ட விபத்து கவனக்குறைவு காரணமாக ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குவாரிகளில் விதிமீறல்கள் உள்ளதா? என அரசு ஆய்வு செய்ய வேண்டும். அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ரூ.1 லட்சம் நிவாரணம்
நெல்லை கல்குவாரி சட்டவிரோதமாக நடந்தது என கூறும் அதிகாரியை தூக்கிலிட வேண்டும். அதிகாரிகளின் மொத்தனப்போக்கே விபத்திற்கு காரணம். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.
நெல்லையில், கல்விக்கு வித்திட்ட காமராஜர், பசுமைப்புரட்சியை கொண்டுவந்த இந்திராகாந்தி சிலை திறப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். காங்கிரஸ் 100 ஆண்டு கால இயக்கம். அன்னை சோனியாகாந்தி 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 50 சதவீத பொறுப்பை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நமது மதத்தை நாம்தான் ஆதரிக்க வேண்டும் என புதிய கொள்கையை கூறுகிறார்கள். மதம், கடவுள் பெயரால் அரசியல் செய்யக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்