சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி போக்சோவில் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-05-16 22:32 GMT
ஓசூர்:
ஓசூர் அருகே பாகலூர் ஏ.கே.காலனி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மது (வயது 26). கட்டிட தொழிலாளி. இவர் பாகலூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்தர். இதுகுறித்த புகாரின்பேரில் மது மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த அவரை ஓசூர் மகளிர் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர் ஓசூர் கிளை ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்