கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் மழை:மார்க்கண்டேயன் நதிக்கு தண்ணீர் வந்தது-பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்

கர்நாடக, ஆந்திர மாநிலங்களில் மழையால், மார்க்கண்டேயன் நதிக்கு தண்ணீர் வந்தது.பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.

Update: 2022-05-16 22:25 GMT
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள மார்க்கண்டேயன் நதியானது கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த நதியின் நீரால் சுற்றுவட்டார பகுதியில் 150 கிராமங்களில் உள்ள சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கோடை மற்றும் மழை பெய்யாதது காரணமாக மார்க்கண்டேயன் நதியில் தண்ணீரின்றி வறண்டு போனது.
இந்த நிலையில் தற்போது கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள காமசமூத்திரம் அணையும், தமிழக எல்லையில் உள்ள சிலுகலப்பள்ளி அணையும் நிரம்பியது. இந்த அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரானது நேற்று மார்க்கண்டேயன் நதிக்கு வந்தது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மார்க்கண்டேயன் நதி, நாச்சிகுப்பம் குப்தா ஆறு, யானைகால் தொட்டி மேம்பால பகுதியில் பெருக்கெடுத்து வந்த தண்ணீரில் பூஜை செய்து மலர்தூவி வரவேற்றனர். 
மேலும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகள், பஸ் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

மேலும் செய்திகள்