மனைவியை தாக்கியவர் கைது

மனைவியை தாக்கியவர் கைது

Update: 2022-05-16 22:19 GMT
நெல்லை:
சீவலப்பேரி வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் மாயாண்டி (வயது 33). இவர் தினமும் மதுபோதையில் மனைவி நாராயணவடிவிடம் (27) தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதுபோதையில் வந்த மாயாண்டி அவரது மனைவியை துன்புறுத்தி அவதூறாக பேசி கையால் அடித்து அரிவாள்மனையை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து நாராயணவடிவு சீவலப்பேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து மாயாண்டியை கைது செய்தார்.

மேலும் செய்திகள்