பெரம்பலூர்:
பெரம்பலூர், அரணாரை அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் என்ற அப்துல் ரகுமான்(வயது 39). பிரபல ரவுடியான இவர் நேற்று மாலை தனது மோட்டார் சைக்கிளில் கோனேரிப்பாளையம் சென்று, அவரது நண்பர் ராஜா(35) என்பவரை அழைத்துக்கொண்டு ஆலம்பாடியில் உள்ள மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். செஞ்சேரி-கோனேரிபாளையம் செல்லும் புறவழிச்சாலையில் சென்றபோது, எதிரே இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4-க்கும் மேற்பட்டோரில், ஒருவர் கத்தியால் அப்துல்ரகுமானை குத்தி கொலை செய்ய முயன்றார். ஆனால் சுதாரித்து கொண்ட அப்துல்ரகுமான் படுகாயத்துடன் அங்கிருந்து தப்பிச்சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி அந்த கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.