இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்க மாற்றுத்திறனாளி கோரிக்கை

இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்க மாற்றுத்திறனாளி கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-05-16 22:06 GMT

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, மேலமாத்தூரை சேர்ந்த மாற்றுத்திறனாளியான காமராஜ், மனு அளிக்க கடும் சிரமத்துடன் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கூறுகையில், எனக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கக்கோரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்திருந்தேன். ஆனால் அது தொடர்பாக இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனக்கு உடனடியாக இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்