தளியில் சந்தான வேணுகோபால சாமி தேர்த்திருவிழா-திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்

தளியில் சந்தான வேணுகோபால சாமி தேர்த்திருவிழா நடந்தது. இதில்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து இழுத்தனர்.

Update: 2022-05-16 22:05 GMT
தேன்கனிக்கோட்டை:
தளியில் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீசந்தான வேணுகோபால சாமி கோவிலில் தேர்த்திருவிழா நடந்தது. விழாவில் ஸ்ரீருக்மணி தாயாருக்கும் ஸ்ரீவேணுகோபால சாமிக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து சாமிகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர வைக்கப்பட்டு தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷம் எழுப்பி தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் 4 வீதிகளிலும் சுற்றி வந்தது. அப்போது தேரின் மீது மிளகு மற்றும் வாழைப்பழங்கள் எரிந்து பொதுமக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

மேலும் செய்திகள்