குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-05-16 22:04 GMT

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஜமீன் மேலூர் கிராமத்தில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்தவர் மொசையன் என்ற பாலமுருகன்(வயது 39). இதேபோல் ஆண்டிமடம் பகுதியில் உள்ள சாத்தனப்பட்டு கிராமம் நடுத்தெருவை சேர்ந்தவர் மணிகண்டன்(39). இவர்கள் 2 ேபரும் மீன்சுருட்டி, உடையார்பாளையம், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் சங்கிலி பறிப்பு, கொள்ளை, திருட்டு, இருசக்கர வாகன திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் ஜெயங்கொண்டம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் மற்றும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஆகியோர் பரிந்துரையின்பேரில், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்