மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் பதவியேற்பு
மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளர் பதவியேற்பு;
மதுரை,
மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளராக பணியாற்றி வந்தவர் வி.பிரசன்னா. இவர் சென்னை ரெயில்வே கோட்டத்தின் முதுநிலை பாதுகாப்பு அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து, மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை இயக்க மேலாளராக பணியாற்றி வரும் ஆர்.பி.ரதிப்பிரியா நேற்று மதுரை கோட்ட ரெயில்வே முதுநிலை வர்த்தக மேலாளராக பதவியேற்று கொண்டார். இவர், 2009-ம் ஆண்டு யூ.பி.எஸ்.சி. தேர்வு மூலம் இந்திய ரெயில்வே போக்குவரத்து சேவை அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அவருக்கு கோட்ட வர்த்தக பிரிவை சேர்ந்த அலுவலர்கள், முதன்மை டிக்கெட் ஆய்வாளர்கள், முதன்மை வர்த்தக ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.