கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களிடம் போலீசார் தீவிர சோதனை
கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களிடம் போலீசார் தீவிர சோதனை நடந்தது.
நாகர்கோவில்,
கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தவர்களிடம் போலீசார் தீவிர சோதனை நடந்தது.
தீவிர சோதனை
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திங்கட்கிழமையான நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 489 போ் மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அரவிந்த், உடனடி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, தனித்துறை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருப்பதி, உதவி மேலாளர் நாகராஜன் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குறைதீர்க்கும் முகாமில் மனு அளிக்க வந்த அனைவரையும், போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் அனுமதித்தனர்.