திசையன்விளை அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்- வாலிபர் பலி
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்- வாலிபர் பரிதாபமாக இறந்தார்
திசையன்விளை:
உவரி அருகே சூடுஉயர்ந்தான்விளை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முப்பந்தர். இவருடைய மகன் முத்துகுமார் (வயது 28). டிரைவரான இவர் நேற்று முன்தினம் இரவில் திசையன்விளை அருகே கோடாவிளை விலக்கில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு சாலையோரம் நின்ற லாரியின் பின்புறம் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியைச் சேர்ந்த முருகனை (வயது 42) தேடி வருகிறார்.