2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை:
நெல்லை டவுன் பருவதசிங்கராஜா தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் முன்விரோதம் காரணமாக அவரது வீட்டின் அருகே கடந்த மாதம் 17-ந்் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் டவுனை சேர்ந்த சுப்பையா மகன் சந்திரசேகர் என்ற சேகர் (வயது 39) மற்றும் சுடலை மகன் மாரியப்பன் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் இவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், உதவி போலீஸ் கமிஷனர் விஜயகுமார், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர். போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமார் இதை ஏற்று அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை நேற்று டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.