பளுகல் பேரூராட்சியில் சொத்துவரி உயர்வை கண்டித்து கையெழுத்து இயக்கம்

பளுகல் பேரூராட்சியில் சொத்துவரி உயர்வை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடந்தது.

Update: 2022-05-16 21:17 GMT
களியக்காவிளை, 
பளுகல் பேரூராட்சியில் சொத்துவரி உயர்வை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடந்தது.
கையெழுத்து இயக்கம்
சொத்துவரி மற்றும் வீட்டுவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பளுகல் பேரூராட்சியில் கையெழுத்து இயக்கம் நடந்தது. பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஹரிகுமார் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்ற ராணுவ வீரர் வர்க்கீஸ் முன்னிலை வகித்தார். இதில் கவுன்சிலர்கள் சித்திரலேகா, சந்திரபாபு, பிரபின், மினி, பாஷித், சுகலஜா, டென்னி மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் சொத்துவரி உயர்வை ரத்து செய்ய கோரி பேரூராட்சி செயல் அலுவலரிடம் பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். 

மேலும் செய்திகள்