சுந்தரசோழபுரத்தில் மஞ்சுவிரட்டு; 24 பேர் காயம்

மஞ்சுவிரட்டு; 24 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-05-16 19:44 GMT
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே சுந்தரசோழபுரம் கிராமத்தில் மலையப்பெருமாள், அய்யனார் கோவில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. விழாவையொட்டி சுந்தரசோழபுரம் கிராமத்தார்கள், இளைஞர்கள் ஊர் பொதுமக்கள் சார்பில் கோவிலிலிருந்து ஜவுளி எடுத்து வரப்பட்டது. பின்னர் சுந்தரசோழபுரம் பெரிய கண்மாயில் மஞ்சுவிரட்டு தொடங்கியது. இதையடுத்து ஒன்றன்பின் ஒன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன. இதனை வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். காளைகள் முட்டியதில் 24 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காமல் சென்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும் சில்வர் வாளி, நாற்காளி, கட்டில் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். மஞ்சுவிரட்டிற்கான ஏற்பாடுகளை சுந்தரசோழபுரம் கிராமத்தார்கள் மற்றும் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்