பந்தநல்லூர் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பந்தநல்லூர் கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Update: 2022-05-16 19:43 GMT
திருவிடைமருதூர், மே.17-
திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் கடைவீதியில் நெடுஞ்சாலைத்துறை செயல்திறன் அடிப்படையிலான கீழ அணைக்கட்டு வைத்தீஸ்வரன் கோவில் பராமரிப்பு திட்டத்தின் கீழ் சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது பந்தநல்லூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவர் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இந்த பணியில் உதவி கோட்ட பொறியாளர் பிலிப் பிரபாகரன்,  இளநிலை உதவியாளர் கந்தன், திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிவேந்தன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்