சிறுமிக்கு பாலியல் தொல்லை:வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விதித்து சிவகங்கை போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டது

Update: 2022-05-16 19:02 GMT
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை அடுத்த சிறுபாலை கிராமத்தை சேர்ந்தவர் மணி பிரசாத் (வயது29). மினி லாரி டிரைவர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு 15 வயதுள்ள சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில் அந்த சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்தது. 
இதுதொடர்பாக சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி மணி பிரசாத் மற்றும் அவருடைய தந்தை, தாயார், சகோதரர்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை சிவகங்கையில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் கூடுதல் சிறப்பு அரசு வக்கீல் தனலட்சுமி ஆஜரானார். 
வழக்கை விசாரணை செய்த நீதிபதி பாபுலால், குற்றம்சாட்டப்பட்ட மணி பிரசாத்துக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.15 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். மற்ற 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.  

மேலும் செய்திகள்