சாராயம் விற்ற 3 பேர் கைது
நாகையில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகையில் சாராயம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் புதுச்சேரி மதுபானம் மற்றும் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு போலீசார் நாகையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நாகை பாலையூர் பகுதியில் புதுச்சேரி மாநில சாராயம் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
சாராய விற்பனை
இதையடுத்து பாலையூர் பிள்ளையார் கோவில் பகுதியில் சாராயம் விற்பனை செய்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் செல்லூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த பிரசாந்த்(வயது22), ஜெல்சன்(19), பெருங்கடம்பனூர் தெருவை சேர்ந்த ஹரிஹரன் (19) என்பதும், இவர்கள் புதுச்சேரி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள்களில் சாராயம் மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
3 பேர் கைது
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1,370 லிட்டர் புதுச்சேரி சாராயம் மற்றும் 250 லிட்டர் பாக்கெட் சாராயத்தையும் கடத்தலுக்கு பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.