9 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

விருதுநகர் மாவட்டத்தில் 9 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.;

Update: 2022-05-16 18:32 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டத்தில் 9 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் மேகநாத ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

நில எடுப்பு தாசில்தார்

அதன் விவரம் வருமாறு:-
மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்ட நில எடுப்பு தாசில்தார் சாந்தி, சிவகாசி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகாசி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றும் ஆனந்தராஜ் சிவகாசி சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 சிவகாசி சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளராக உள்ள சீனிவாசன் ராஜபாளையம் தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராஜபாளையம் தாசில்தாராக உள்ள ராமச்சந்திரன் கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனே பொறுப்பு ஏற்க வேண்டும்

 அருப்புக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக இருக்கும் லோகநாதன் சிவகாசி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். 
சிவகாசி தாசில்தாராக பணியாற்றும் ராஜ்குமார் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு தனி தாசில்தாராக பணியாற்றும் ராமநாதன், கலால் துணை ஆணையர் அலுவலக ஆய மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 ஆய மேற்பார்வையாளராக பணியாற்றும் மகேஷ் சாத்தூர் சிப்காட்டில் நில எடுப்பு தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். 
சிப்காட் நில எடுப்பு தாசில்தாராக பணியாற்றும் பாண்டிசங்கர்ராஜ் அருப்புக்கோட்டை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது என்றும் இதன்படி தாசில்தார்கள் உடனடியாக பொறுப்பேற்க வேண்டும். எவ்வித கோரிக்கை மனுவோ விடுப்பு மனுவோ ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்றும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்