4 பேருக்கு நீதிமன்ற காவல் நீடிப்பு

விருதுநகரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் வழக்கில்4 பேருக்கு நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு உள்ளது.;

Update: 2022-05-16 18:20 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகரில் இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட ஜீனத் அகமது, ஹரிஹரன், மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நேற்று ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோர்ட்டுக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் 4 பேரையும் அழைத்து வந்து ஆஜர்படுத்தினார்கள். அவர்களை மீண்டும் வருகிற 30-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி.போலீசார் 4 பேரையும் மதுரை சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

மேலும் செய்திகள்