பயிற்சி முகாமில் கலெக்டர் ஆய்வு
தேனி மாவட்டத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.
தேனி:
தேனி மாவட்டத்தில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இணைய வழியில் பட்டா மாறுதல், உட்பிரிவு அளவிடும் பணி தொடர்பான புத்தாக்கப் பயிற்சி முகாம் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. தாலுகா அளவில் 5 இடங்களில் பயிற்சி நடந்து வருகிறது. தேனி தாலுகா அளவிலான பயிற்சி முகாம் தேனி கொண்டு ராஜா நினைவு உயர்நிலைப்பள்ளியில் நடந்து வருகிறது.
இந்த பயிற்சியை மாவட்ட கலெக்டர் முரளிதரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பயிற்சியின் மூலம் கிடைத்த அனுபவம், பயிற்சி அளிக்கப்பட்ட விதம் குறித்து கிராம நிர்வாக அலுவலர்களிடம் அவர் கேட்டறிந்தார். இந்த பயிற்சி நாளை (செவ்வாய்க்கிழமை) நிறைவு பெறுகிறது. இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.