காரைக்குடி நகராட்சி பகுதிகளில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்ட பணிகள்; நகராட்சி தலைவர் முத்துத்துரை பேட்டி

காரைக்குடி நகராட்சி பகுதிகளில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெற உள்ளதாக நகராட்சி தலைவர் முத்துத்துரை கூறினார்.

Update: 2022-05-16 18:11 GMT
காரைக்குடி, 
காரைக்குடி நகராட்சி பகுதிகளில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெற உள்ளதாக நகராட்சி தலைவர் முத்துத்துரை கூறினார்.
பேட்டி
காரைக்குடி நகராட்சி தலைவர் எஸ்.முத்துத்துரை நகராட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காரைக்குடி நகரின் அழகினை மேம் படுத்தும் பணிகளின் முதற்கட்டமாக ரூ. 6 கோடி திட்ட மதிப்பீட்டில் பெரியார் சிலையில் இருந்து ெரயில்வே ரோடு வரையிலான 100 அடி சாலை மற்றும் காரைக்குடி மெடிக்கல் சென்டர் முதல் கோர்ட்டு வரையிலான முடியரசனார் சாலை ஆகிய இரு பகுதிகளிலும் உள்ள சாலைகள் விரிவுபடுத்தப்பட உள்ளது.
 சாலையோரங்களில் மக்களின் நடைபாதைக்காக அலங்கார கற்கள் பதிக்கப்பட்டு, சென்டர் மீடியனில் பல வண்ண பூச்செடிகள், அழகு மிளிரும் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. மற்ற நகரங்களுக்கு முன்மாதிரியாக இந்த சாலைகள் திகழும். ரூ. 2 கோடி மதிப்பீட்டில் ெரயில்வே நிலைய சாலையில் இருந்து சாலை விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப் பட உள்ளது.
நவீன நூலகம்
மக்களின் அறிவுத்திறனை மேம்படுத்த வாசிப்பை நேசிக்க செய்யும் வகையிலும் நகரின் மையப்பகுதியான கண்ணதாசன் மணிமண்டபத்தில் ரூ.2 கோடி செலவில் நவீன நூலகம் அமைக்கப்பட உள்ளது. அருணா நகர் பூங்கா ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது. 
பொதுமக்கள் வியா பாரிகள் வசதிகளை மேம்படுத்துவதற்காக வியாழக் கிழமை வாரச்சந்தை விரிவுபடுத்தப்பட்டு அனைத்து நவீன வசதி களுடன் கூடிய விற்பனை கூடங்கள் அமைக்கப்படும். அதற்கான சாலை விரிவுபடுத்தப்பட்டு போக்குவரத்து வசதிகள் பாதிக்காதவாறு பார்க்கிங் வசதிகளும் செய்துதரப்படும். 
வாரச்சந்தை
பொது மக்களின் கோரிக்கைகளை ஏற்று வாரச்சந்தை அருகே உள்ள மயானம் ரூ. 1 கோடியே 35 லட்சம் செலவில் அனைத்து வசதியுடன் கூடிய நவீன மின்மயானமாக மாற்றப்படும். சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் அதற்கான கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த முதற் கட்டமாக ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் செஞ்சை, நியூ டவுன் பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைய உள்ளது. காந்திபுரம், கணேசபுரம் பகுதிகளில் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய செல்வ மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெறுகிறது. 
இதற்கான திட்டத்தின் கீழ் 6 மையங்களுக்கு அனுமதி கிடைத்துஉள்ளது. தற்போது 2 இடங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 4 இடங்களை தேர்வு செய்ய ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
அடிப்படை வசதி
மேலும் நகர்மன்ற உறுப்பினர்கள் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று அடிப்படை வசதி களுக்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது நகர் மன்ற துணைத்தலைவர் குணசேகரன் உடன் இருந்தார்.

மேலும் செய்திகள்