டெங்கு தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்

தலைஞாயிறில் டெங்கு தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2022-05-16 18:30 GMT
வாய்மேடு:
 தலைஞாயிறில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் டெங்கு தடுப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளையராஜா  வரவேற்றார்.டெங்கு விழிப்புணர்வு ஊர்வலத்தை ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார். தலைஞாயிறு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  இருந்து தொடங்கிய ஊர்வலம் மேலத்தெரு, அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையத்தை வந்தடைந்தது. முடிவில் சுகாதார ஆய்வாளர் பட்டாபிராமன் நன்றி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்