காரைக்குடி பகுதியில் மாலை நேரங்களில் மக்களை குளிர வைக்கும் மழை

காரைக்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளுமை சூழ்ந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2022-05-16 18:00 GMT
காரைக்குடி, 
காரைக்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளுமை சூழ்ந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
அக்னி வெயில்
 அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் அவதி அடைந்து வருவது வழக்கம். இந்தநிலையில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திர வெயில் தாக்கம் கடந்த 4-ந்தேதி முதல் தொடங்கி வருகிற 28-ந்தேதி வரை நடக்கிறது. அக்னி நட்சத்திர வெயில் தாக்கம் தொடங்கிய சில நாட்களில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் பகல் நேரங்களில் வெயில் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. 
இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக சிவகங்கை மாவட் டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் அக்னி நட்சத்திர வெயில் தாக்கத்தை குறைக்கும் வகையில் அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் இரவு நேரங்களில் குளுமையான நிலை நீடித்து வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு காரைக்குடி மற்றும் திருப்பத்தூர் பகுதியில் மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை 2 மணி நேரம் தொடர்ந்து பெய்ததால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
குளுமை
இதேபோல் நேற்றுமுன்தினம் காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மாலையில் ½ மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்து குளிரச் செய்தது. இந்தநிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் வெயில் தாக்கம் இருந்த நிலையில் மதியம் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து மாலை 5.15 மணிஅளவில் திடீரென கருமேக கூட்டம் சூழ்ந்து பலத்த மழை பெய்ய தொடங்கியது.
 இந்த மழை தொடர்ந்து 1 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த தால் சாலைகள் மற்றும் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக் கெடுத்து ஓடியது. நேற்று ஒரு மணி நேரத்திற்கும் மேல் பலத்த மழை பெய்ததால் இரவு முழுவதும் குளுமையான நிலை நீடித்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்