தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
அம்மூரில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம், அம்மூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 34). கூலித்தொழிலாளி. உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.