கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்றிய முதியவர் நீரில் மூழ்கி சாவு

திமிரி அருகே கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்றிய முதியவர் நீரில் மூழ்கி இறந்தார்.

Update: 2022-05-16 17:57 GMT
ஆற்காடு

திமிரியை அடுத்த ராமபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 73). இவர் நிலத்தில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆடு அருகிலிருந்த கிணற்றில் விழுந்து விட்டது. உடனே அவர் கிணற்றில் இறங்கி ஆட்டை காப்பாற்றியுள்ளார். ஆனால் ஆறுமுகம் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் திமிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் ஆறுமுகத்தின் உடலை மீட்டனர். உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடுஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்