மாரியம்மன் கோவில் தேரோட்டம்
திருமக்கோட்டை மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது
திருமக்கோட்டை
திருமக்கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில், கிராமத்து வழக்கப்படி ஒவ்வொரு கிராம மக்களும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக பக்கத்து கிராமங்களான வள்ளூர், மாங்கோட்டைநத்தம், சமுதாயம், மகாராஜபுரம், பெருமாள் கோவில் நத்தம் ஆகிய கிராமங்களில் இருந்து பொதுமக்கள் சீர்வரிசை பொருட்கள் எடுத்து வந்திருந்தனர். தேரோட்டத்தையொட்டி திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பாதுகாப்பு பணியில் திருமக்கோட்டை போலீசார் ஈடுபட்டனர்.