நாகர்கோவிலில் கோவில் விழாவில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

நாகர்கோவிலில் கோவில் விழாவில் பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

Update: 2022-05-16 17:45 GMT
நாகர்கோவில், 
நாகர்கோவில் கோட்டார் வடலிவிளை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி முத்துலட்சுமி (வயது 37). சம்பவத்தன்று இவர் வடலிவிளை பகுதியில் உள்ள ஒரு கோவில் விழாவுக்கு சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர், முத்துலட்சுமி கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றதாக தெரிகிறது. இதுகுறித்து முத்துலட்சுமி கோட்டார் போலீசில் புகார் அளித்தார். அதன்போில் போலீசார் நகையை திருடி சென்ற மர்மநபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்