சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் போக்சோவில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கரூர்,
கரூர் அருகே உள்ள நெரூர் வடக்கு பகுதியை சேர்ந்த திலீப் (வயது 24). இவர் பிளஸ்-2 படித்து வரும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து திலீப்பை கைது செய்து சிறையில் அடைத்தார்.