நிலக்கடலை சாகுபடி பணி மும்முரம்

வேதாரண்யம் பகுதியில் நிலக்கடலை சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது;

Update: 2022-05-16 18:30 GMT
வேதாரண்யம்:
வேதாரண்யம் பகுதியில் நிலக்கடலை சாகுபடி பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நிலக்கடலை சாகுபடி
 நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம், பெரியகுத்தகை, நாலுவேதபதி, செட்டிபுலம், கத்தரிப்புலம், கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில்  2500 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி ெசய்யப்பட்டுள்ளது.  கோடைக்காலத்தில் சாகுபடி செய்யப்படும் நிலக்கடலை 90 நாட்களில் மகசூல் தரக்கூடியது.  வேதாரண்யம் பகுதியில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
பூச்சி தாக்குதல்
தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் நிலக்கடலை பயிருக்கு தண்ணீரை மோட்டார் மூலம் இறைத்து பாய்ச்சி வருகின்றனர்.  நிலக்கடலை பூத்து பிஞ்சு விட தொடங்கி உள்ளதால் செடியில் வெள்ளை நோய் மற்றும் மஞ்சள் புள்ளிநோய் பூச்சி தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. 
ஆலோசனை வழங்க வேண்டும்
பூச்சி தாக்குதலால் மகசூல் பாதிக்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
எனவே வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களை பார்வையிட்டு நோயை கட்டுப்படுத்த தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்