நாமக்கல்லில் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-16 17:32 GMT
நாமக்கல்:
அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்த வேண்டும். அருந்ததியர் மக்கள் மீது தொடரும் சாதிய படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அருண்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் நாகராசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்