பாப்பாரப்பட்டி அருகே நகைக்கடை தொழிலாளி தற்கொலை

பாப்பாரப்பட்டி அருகே நகைக்கடை தொழிலாளி தற்கொலை

Update: 2022-05-16 17:32 GMT
பாப்பாரப்பட்டி:
நல்லம்பள்ளி அருகே உள்ள கடுதுகாரம்பட்டியை சேர்ந்தவர் வேடி. இவருடைய மகன் சேகர் (வயது 32). இவருடைய மனைவி சுதா. சேகர் தர்மபுரியில் உள்ள நகைக்கடை ஒன்றில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் சமீபகாலமாக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சேகர் பாப்பாரப்பட்டி அருகே பூகானஅள்ளி கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு மனைவியுடன் சென்றார். 
இதற்கிடையே சேகர் இயற்கை உபாதை கழிக்க சென்று வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அங்குள்ள கருவேல மரத்தில் தூக்கில் சேகரின் பிணம் தொங்கியது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்