நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு தடுப்பு தினம் கடைபிடிப்பு

நல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய டெங்கு தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது.

Update: 2022-05-16 17:32 GMT
கந்தம்பாளையம்:
நல்லூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று தேசிய டெங்கு தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதற்கு வட்டார மருத்துவ அலுவலர் மேகலா தலைமை தாங்கினார். இதில் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு டெங்கு தடுப்பு தின உறுதிமொழி ஏற்று கொண்டனர். இதையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் மேகலா கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் குன்னமலை ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன், மருத்துவ அலுவலர் நந்தினி, சுகாதார ஆய்வாளர்கள் நவலடியான், பெரியசாமி, அருண், ஊராட்சி மன்ற செயலாளர் பரிமளா ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக குன்னமலையில் ஏடிஸ் கொசு ஒழிப்பு பணி நடந்தது. அப்போது வீதிகளில் கிடந்த டயர்கள், தேவையற்ற பொருட்கள் அகற்றப்பட்டன. மேலும் டெங்கு காய்ச்சல் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்