பாண்டமங்கலம் அருகே மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி பெண் பலி

பாண்டமங்கலம் அருகே மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி கீழே விழுந்ததில் பெண் பலியானார்.

Update: 2022-05-16 17:31 GMT
பரமத்திவேலூர்:
சேலை சிக்கியது
பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி லதா (வயது 47). அதே பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் ‌மனைவி சித்ரா (40). சித்ரா, லதா ஆகியோர் இருக்கூர் அருகே உள்ள ஒரு கரும்பு தோட்டத்துக்கு மொபட்டில் சென்றனர்.
அங்கு கால்நடைகளுக்கு தேவையான தீவனத்தை எடுத்து கொண்டு மொபட்டில் மீண்டும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மொபட்டை சித்ரா ஓட்டினார். லதா பின்னால் அமர்ந்திருந்தார். வழியில் சித்ராவின் சேலை திடீரென மொபட்டின் முன் சகக்ரத்தில் சிக்கியது.
பெண் பலி
இதனால் நிலைதடுமாறி சித்ரா, லதா கீழே விழுந்தனர். இதில் சித்ராவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. லதா லேசான காயம் அடைந்தார். அந்த பகுதியை சேர்ந்தவர் சித்ராவை மீட்டு சிகிச்சைக்காக பரமத்திவேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். 
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாண்டமங்கலம் அருகே மொபட் சக்கரத்தில் சேலை சிக்கி கீழே விழுந்ததில் பெண் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்