மாணவர் ஓட்டி வந்த மினி லாரி தோட்டத்துக்குள் புகுந்து விபத்து

ஆலங்காயம் அருகே மாணவர் ஓட்டி வந்த மினி லாரி தோட்டத்துக்குள் புகுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர்.

Update: 2022-05-16 17:31 GMT
வாணியம்பாடி

ஆலங்காயத்தை அடுத்த கல்லரப்பட்டி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 11 பேர் ரெட்டிவலை பகுதியில் உள்ள பாருக் என்பவரின் தோப்பில் மாங்காய் பறித்துக்கொண்டு மினி லாரியில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். மினி லாரியை குரிசிலாபட்டு பகுதியை சேர்ந்த 17 மாணவர் ஒருவர் ஓட்டி வந்துள்ளார். ஆலங்காயத்தை அடுத்த நரசிங்கபுரம் கணவாய்மேடு என்ற இடத்தில் சென்ற போது டிரைவரின் கவனக் குறைவால் மினி லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த பருத்தி தோட்டத்தில் புகுந்து விபத்துக்குள்ளானது.

இதில் லாரியில் பின்புறம் அமர்ந்து பயணம் செய்த செல்வி, லட்சுமி, பழனி, மகேந்திரன், கோவிந்தசாமி உள்பட 6 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனடியாக அப்பகுதி மக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து ஆலங்காயம் போலிசார் வழக்குபதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி தலைமறைவாக உள்ள டிரைவரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்