இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு

இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-05-16 17:30 GMT
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
நாங்கள் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகிறோம். தற்போது வாடகை வீட்டில் வசித்து வரும் நாங்கள் வாடகை கொடுக்க முடியாமல், மிகவும் சிரமம் அடைந்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீடோ, நிலமோ இல்லை.
எனவே எங்களின் குடும்ப நலன் கருதி, வறுமையில் சிக்கி தவித்து வரும் எங்களுக்கு அரசு வழங்கும் இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்