தர்மபுரியில் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தர்மபுரியில் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-05-16 17:30 GMT
தர்மபுரி:
தர்மபுரி முகமது அலி கிளப் ரோட்டில் அரசு அருங்காட்சியகம் எதிரில் இருந்த தினசரி காய்கறி மார்க்கெட் வளாகம் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. அப்போது தினசரி காய்கறி மார்க்கெட் சந்தைப்பேட்டைக்கு மாற்றப்பட்டது. அந்த இடத்தில் புதிய வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் தற்போது புதிதாக தனியார் பங்களிப்புடன் புதிய வணிக வளாகம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதனிடையே புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்யக்கோரி தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முனிரத்தினம், செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை இதில் ஏராளமான தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்