டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிரிசமுத்திரம் ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
வாணியம்பாடி
ஆலங்காயம் ஒன்றியம் கிரிசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட புதூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் தேசிய டெங்கு தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் விதம் மற்றும் எளிய முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைஎடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் இளநிலை பூச்சியியல் வல்லுனர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.