மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டவர், குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

5 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாகி சுற்றித்திரிந்து மறுவாழ்வு இல்லத்தில் சேர்க்கப்பட்டவர், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Update: 2022-05-16 17:16 GMT
திருப்பத்தூர்

வாணியம்பாடி பகுதியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்த இளைஞரை அப்பகுதி மக்கள் மீட்டு, திருப்பத்தூரில் உள்ள உதவும் உள்ளங்கள் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான மறுவாழ்வு இல்லத்தில் ஒப்படைத்தனர். அங்கு 5 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்ட பின் மனநலம் பாதிப்பு குறைந்தது.

 அதைத்தொடர்ந்து அந்த இளைஞரிடம் விசாரித்த போது அவர் கர்நாடக மாநிலம், பத்ராவதிப் பகுதியை சேர்ந்த பிரகாஷ் ென்பவரது மகன் வினோத் (வயது 32) என்பதும், பிளஸ்-2 வரை படித்துவிட்டு பேக்கரி கடையில் பணி புரிந்து வந்த இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பணிக்கு சென்றவர் ெரயில் ஏறி தமிழ்நாடு வந்தது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து பெங்களூருவில் உள்ள கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தகவல் தெரிவித்து திருப்பத்தூருக்கு அவரின் பெற்றோர் வரவழைக்கப்பட்டனர். 

பின் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அமர் குஷ்வாஹா முன்னிலையில் அந்த இளைஞர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலாஜி, உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவர் சொ.ரமேஷ் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்