தாய்- மகள் கொலை

ஜல்னாவில் தாய் மற்றும் மகளை கொலை செய்த கணவரும், அவரது முதல் மனைவியும் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-05-16 17:11 GMT
கோப்பு படம்
மும்பை, 
ஜல்னாவில் தாய் மற்றும் மகளை கொலை செய்த கணவரும், அவரது முதல் மனைவியும் கைது செய்யப்பட்டனர். 
குடும்ப சண்டை
ஜல்னா மாவட்டத்தில் உள்ள சோனல் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவர் தனது 2 மனைவிகளான பாரதி சதாரே(வயது 36), சீமா மற்றும் குழந்தைகள், வளர்ப்பு குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். 
இந்த நிலையில் சமீபத்தில் கணேசுக்கும், 2-வது மனைவியான பாரதி சதாரேவுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. 
அடிக்கடி இவர்களின் குடும்பத்தில் சண்டை ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை கணேசுக்கும், அவரது இரண்டாவது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. 
 இதில் கடும் ஆத்திரம் அடைந்த  கணேசும் அவரது முதல் மனைவி சீமாவும் சேர்ந்து இருப்பு கம்பியால் பாரதி சதாரேவை கடுமையாக தாக்கினர். 
பரிதாப சாவு
மேலும் தடுக்க வந்த பாரதி சதாரேவின் மகள் வர்ஷாவும் தாக்குதலுக்கு ஆளாகினாள். இதில் படுகாயம் அடைந்த தாய், மகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களை கொலை செய்த கணவரையும், அவரின் முதல் மனைவியையும் கைது செய்தனர். 
 மேலும் கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்